/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 22, 2025 01:41 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் நேரடியாக சென்று, பூத் கிளை நிர்வாகிகளை அணுகி, எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சேலம் மண்டல ஐ.டி., பிரிவு துணை செயலாளர் நிர்மல் ஆனந்த், சேலம் புறநகர் மாவட்ட ஐ.டி., பிரிவு துணை செயலாளர் தமிழ்வாணன், துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பேசுகையில், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும், என்றார்.இதில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், நகர செயலாளர் கேசவன், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், அமைப்புசாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் ஆஜி, ஒன்றிய செயலாளர்கள் பையூர் ரவி, கண்ணியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.ஒன்றிய செயலாளர் வேங்கன் நன்றி கூறினார்.