/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர்கள் உட்பட 1,480 பேர் கைது
/
அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர்கள் உட்பட 1,480 பேர் கைது
அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர்கள் உட்பட 1,480 பேர் கைது
அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர்கள் உட்பட 1,480 பேர் கைது
ADDED : டிச 31, 2024 07:04 AM
கிருஷ்ணகிரி: சென்னை அண்ணா பல்கலை., மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய, தி.மு.க., அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர் ராஜி, மாவட்ட துணை செயலாளர் மதன், சூளகிரி ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம் உட்பட 500 க்கும் மேற்பட்டோர், தி.மு.க., அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி உட்பட, 500 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மாலையில் விடுவித்தனர்.
* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பேசுகையில், '' தமிழகத்தில், போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு, தி.மு.க., அரசு பாதுகாப்பாக இருக்கிறது. மாணவியருக்கும், பெண் போலீசாருக்குமே கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு சென்ற பெண் எஸ்.ஐ.,யின் சடையை பிடித்து இழுத்து தாக்குகின்றனர். மாணவிக்கு அநீதி நடந்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வரை போராட்டம் ஓயாது. தமிழகத்தில் நடக்கும் அவல ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பும் முன்னரும், முனுசாமி பேசியபோதே போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அ.தி.மு.க.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க.,வினர் போலீசாரை கண்டித்து தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ,தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் உள்பட, 412 பேரை போலீசார் கைது செய்தனர்.
* தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் தலைமை தாங்கினார். விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 3 எம்.எல்.ஏ.,க்கள், 20 பெண்கள் உள்பட, 570 பேரை போலீசார் கைது செய்தனர்.