/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : டிச 12, 2025 05:27 AM

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், ஆந்திரா அரசு வழங்குவது போல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூ-தியர் அனைவருக்கும் ஓய்வூதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பணிவரன் முறை செய்த என்.எம்.ஆர்., ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அனுமதித்து அரசாணையும், சிறப்பு சேமநல நிதியும், பி.எப்., வட்டி உள்ளிட்ட பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.மாவட்ட தலைவர் துரை, மாநில செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். ஜெகஜீவன் நன்றி கூறினார்.