/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இ.பி.எஸ்., நிகழ்ச்சிக்கு வந்தபோது விபத்து கையிழந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

ADDED : டிச 12, 2025 05:28 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிகளில், கடந்த ஆக., 12-ல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்-களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயண நிகழ்ச்சியை மேற்கொண்டார்.
அப்போது, பர்கூரில் நடந்த நிகழ்ச்சியை பார்க்க, போச்சம்பள்ளி அடுத்த, கீழ்மைலம்பட்டி பகு-தியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர் ஈச்சர் மினி லாரியில் சென்றனர். நிகழ்ச்சியை பார்த்து விட்டு அன்றிரவு மீண்டும் தங்களது கிராமத்திற்கு சென்றபோது, 8:30 மணிய-ளவில் மத்துார் அடுத்த, அத்திகானுார் அருகே, காவேரிப்பட்டணம்- திருப்பத்துார் சாலையில், எதிரே வந்த பிக்கப் வேன் மோதியதில், மினி லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், 35க்கும் மேற்-பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
அதில் இடது கையை இழந்த மேல்மைலம்பட்-டியை சேர்ந்த பழனியம்மாள், 54, என்பவருக்கு, அ.தி.மு.க., சார்பில், துணை பொதுச்செயலாளர் முனுசாமி நேற்று அவரின் வீட்டிற்கு சென்று, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினார். அப்போது, அ.தி.மு.க., நிர்வாகி
கள் உடனிருந்தனர்.