/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் அம்மையப்பன் திருக்கல்யாணம்
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் அம்மையப்பன் திருக்கல்யாணம்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் அம்மையப்பன் திருக்கல்யாணம்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் அம்மையப்பன் திருக்கல்யாணம்
ADDED : மார் 14, 2024 01:20 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த, 10ல் மயான கொள்ளை திருவிழாவும், நேற்று முன்தினம் இரவு, அக்னி குண்டம் தீமிதி விழாவும் நடந்தது. நேற்று பகல், 12:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
இதில், சிறப்பு யாகம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க அம்மையப்பனுக்கு மாலை மாற்றி திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டு, அம்மனுக்கு மொய் எழுதினர்.
திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு புடவை மற்றும் மங்கல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு அம்மையப்பன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தன. இன்றிரவு, 7:00 மணிக்கு கும்ப பூஜையும், அன்னதானமும், கொடி இறக்குதலுடன், விழா நிறைவு பெறுகிறது.

