/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக்கிலிருந்து விழுந்த அங்கன்வாடி ஊழியர் பலி
/
பைக்கிலிருந்து விழுந்த அங்கன்வாடி ஊழியர் பலி
ADDED : நவ 09, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளத்தை சேர்ந்த லோக-நாதன் மனைவி ஆனந்தலட்சுமி, 54. அன்னியாளம் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்தார். இவரது மகன் நந்தகுமார், 30. இவருடன் கடந்த, 3ம் தேதி மாலை, தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் ஹோண்டா பைக்கில் சென்றார்.
அடவிசாமிபுரம் பிரிவு ரோடு அருகே மாலை, 6:20 மணிக்கு சென்றபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி தாய், மகன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த ஆனந்த-லட்சுமி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

