ADDED : நவ 16, 2026 03:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த அண்ணாதுரை மாரத்தான் போட்டியில், 375 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் சார்பில், அண்ணாதுரை மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. போட்டியை, த.வெ.க., - எம்.எல்.ஏ., முகுந்தன் துவக்கி வைத்தார். இப்போட்டிகள், 17 வயது முதல், 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என, இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி, அண்ணா நகர், பாஞ்சாலியூர் மற்றும் கொண்டேப்பள்ளி முனியப்பன் கோவில் வழியாக சென்று, விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. போட்டியில், 250 ஆண்கள் மற்றும், 125 பெண்கள் என மொத்தம், 375 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். ஒவ்வொரு வயது பிரிவிலும் முதல் பரிசு, 5,000 ரூபாய், 2ம் பரிசு, 3,000 ரூபாய், 3ம் பரிசு, 2,000 ரூபாய் மற்றும் 4ம் இடம் முதல், பத்தாம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் பரிசுத்தொகைகள் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன.
