/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் அண்ணாமலை நிகழ்ச்சி; பங்கேற்க அழைப்பு
/
கிருஷ்ணகிரியில் அண்ணாமலை நிகழ்ச்சி; பங்கேற்க அழைப்பு
கிருஷ்ணகிரியில் அண்ணாமலை நிகழ்ச்சி; பங்கேற்க அழைப்பு
கிருஷ்ணகிரியில் அண்ணாமலை நிகழ்ச்சி; பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 10, 2024 12:27 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சிவப்பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இன்று (ஜன., 10) நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு ஊத்தங்கரையில் யாத்திரை, 3:00 மணிக்கு ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'பாரதத்தின் வளர்ச்சியில் மகளிர் பங்கு' என்ற தலைப்பில் அண்ணாமலை பேசுகிறார். 4:00 மணிக்கு பர்கூரில் யாத்திரை, 6:00 மணிக்கு கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
தொடர்ந்து நாளை காலை, 11:00 மணிக்கு ராயக்கோட்டையிலும், பிற்பகல், 3:00 மணிக்கு தளியிலும் யாத்திரை மேற்கொள்கிறார். மாலை, 6:00 மணிக்கு ஓசூர் ராம்நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மாநில பொறுப்பாளர் ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். எனவே நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

