/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நியமனம்
/
ஊத்தங்கரை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நியமனம்
ADDED : அக் 10, 2024 01:55 AM
ஊத்தங்கரை அ.தி.மு.க.,
ஒன்றிய செயலாளர் நியமனம்
ஊத்தங்கரை, அக். 10-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், அ.தி.மு.க.,வில் புதியதாக, மத்திய ஒன்றிய செயலாளராக சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று ஊத்தங்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். புதிய ஒன்றிய செயலாளர் சாமிநாதன், கட்சியின் கொள்கைகளை பின்பற்றி, மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதாக உறுதியளித்தார்.