/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெங்கடதாம்பட்டி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
/
வெங்கடதாம்பட்டி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 06, 2025 12:54 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, வெங்கடதாம்பட்டி பஞ்.,ல் பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பாராட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாரியப்பன் தலைமை வகித்தார். காமராஜ் முன்னிலை வகித்தார்.
வெங்கடதாம்பட்டி பஞ்.,ல் பணிபுரியும் அனைத்து துாய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சிவானி சில்க்ஸ் உரிமையாளர் மோகன்ராஜ், ஆடிட்டர் லோகநாதன் சேகர், மெடிக்கல்ஸ் சதீஷ்பாபு, அப்துல் கலாம் அகாடமி ஆனந்தகுமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் வெங்கடேசன் மற்றும் உள்ளூர் மக்கள், துாய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துாய்மை பணியாளர் தங்கவேல் வரவேற்றார். சின்ன பாப்பா நன்றி கூறினார். பஞ்சாயத்து கிளர்க் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.