/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுற்றுலா வந்தவர்களிடம் தகராறு காரை சேதப்படுத்தியவர் கைது
/
சுற்றுலா வந்தவர்களிடம் தகராறு காரை சேதப்படுத்தியவர் கைது
சுற்றுலா வந்தவர்களிடம் தகராறு காரை சேதப்படுத்தியவர் கைது
சுற்றுலா வந்தவர்களிடம் தகராறு காரை சேதப்படுத்தியவர் கைது
ADDED : ஜூன் 06, 2025 01:15 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மாரேகவுண்டப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி, 30, கூலித்தொழிலாளி. இவர், தன் குடும்பத்தினருடன் கடந்த, 2ல், காரில் ஒகேனக்கல் சென்றுள்ளார். சுற்றுலா சென்று விட்டு மாலை மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் காரை நிறுத்திவிட்டு அங்கு பானிப்பூரி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த இருவர், சீனிவாஸ் ரெட்டியிடம் தகராறு செய்து, காரை சேதப்படுத்தினர். இதை சீனிவாச ரெட்டி தட்டிக்கேட்டுள்ளார். தொடர்ந்து குடும்பத்துடன் காரில் சென்ற அவரை, பைக்கில் இருவர் துரத்தி வந்துள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகார் படி, அஞ்செட்டி போலீசார், சீனிவாச ரெட்டியிடம் தகராறு செய்த தேன்கனிக்கோட்டை சேர்ந்த டிரைவர் ராமு, 25, என்பவரை கைது செய்தனர்.