/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சட்டசபை பேரவை மனுக்கள் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு
/
சட்டசபை பேரவை மனுக்கள் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு
சட்டசபை பேரவை மனுக்கள் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு
சட்டசபை பேரவை மனுக்கள் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு
ADDED : ஆக 21, 2024 06:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டசபை பேரவை மனுக்கள் குழு-வினர் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டசபை பேரவை மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் எம்.எல்.ஏ., தலை-மையிலான, 10 எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழுவினர், கிருஷ்ண-கிரி மாவட்டத்தில் சூளகிரி, மாரண்டப்பள்ளி, சிம்பல்திராடி, பெரியமுத்துார், திம்மாபுரம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., மற்றும் வெண்ணம்பள்ளி ஆகிய பகுதிகளில் மனுதாரர்கள் அனுப்பிய மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, நடந்து வரும் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனுக்கள் குறித்து விசாரிக்கும் வகையில் அனைத்து துறை அலு-வலர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவி.செழியன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. மனுக்கள் குழு உறுப்பினர் மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சரயு ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.பொதுமக்கள் அனுப்பிய பல்வேறு மனுக்களில், 41 மனுக்கள் குறித்து அதிகாரிகளுடன், குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி பிரச்னையை உடனடியாக தீர்க்க, விரைந்து முடிக்க அறிவு-றுத்தினர். கூட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் கலந்து கொள்ள வந்தார். அவருக்கு இருக்கை ஒதுக்கா-ததால், சிறிது நேரத்தில் கோபத்துடன் வெளியேறினார். இது குறித்து அவர் கூறுகையில், “கிருஷ்ணகிரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் என்ற முறையில், எனக்கு அழைப்பு இல்லை, யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. கூட்-டத்தில் கலந்து கொள்ளாத, ஓசூர் மாநகர மேயர் சத்யாவுக்கு இருக்கை போடப்பட்டுள்ளது. எனக்கு இருக்கை இல்லை, பெயர-ளவுக்கு கூட யாரும் என் பெயரை கூட சொல்லவில்லை. இதனால் மனவருத்தத்துடன் வெளியேறினேன்,” என்றார்.
குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் சங்கர், சின்னப்பா, சவுந்-திரபாண்டியன், ஜோதி, கந்தசாமி, சுந்தரராஜன், ஜெகன் மூர்த்தி, ராமச்சந்திரன், பாபு மற்றும் கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

