/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் சாதனை
/
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் சாதனை
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் சாதனை
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் சாதனை
ADDED : பிப் 18, 2024 10:13 AM
ஊத்தங்கரை: ஜே.இ.இ., மெயின் நுழைவுத்தேர்வு அமர்வு, ஜன., இறுதி வாரத்தில் நடந்தது.
இதன் தேர்வு முடிவுகளில், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அதில் பிளஸ் 2 மாணவர்களான வித்தேஷ்ஜெயன், 99.00; கிரிதரன், 98.75; கீர்த்தனா, 98.68; நிஷாலினி, 97.20; வினோத்குமார், 96.22; ரமணா, 95.59; ரேஷ்வந்த், 94.34; சுபா, 92.79; தர்ஷனா, 91.99; மற்றும் தமிழகிலன், 91.83, ஆகியோர் பள்ளியில் முதல், 10 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். மேலும் 37 மாணவர்கள், 80 சதவீத மதிப்பெண் பெற்று மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஆகியவற்றில் சேர தகுதி பெற்றுள்ளனர். பள்ளியின் முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்களை, சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் திருமால் முருகன், செயலர் ஷோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் கணபதிராமன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். மேலும் இயற்பியல் ஆசிரியர்கள் ஸ்ரீசாய், தமிழரசன், வேதியியல் ஆசிரியர்கள் சவுத்ரி, சிரஞ்சீவி மற்றும் கணித ஆசிரியர்கள் செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோரை, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால் முருகன் பாராட்டினார்.