தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரைஸ் மில் ஓனரை தாக்கியவர் கைது

ரைஸ் மில் ஓனரை தாக்கியவர் கைது

ரைஸ் மில் ஓனரை தாக்கியவர் கைது


ADDED : நவ 02, 2026 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காவிரியப்பா, 80. தல்சூர் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். ரைஸ் மில் அருகே பெருமாளப்பா மனைவி நாகரத்தினம்மா, 57, என்பவர் வசிக்கிறார். இவர், ஏணிமுச்சந்திரம் கிராமத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே, அப்பகுதியை சேர்ந்த கூலித்

தொழிலாளி முருகேஷ், 45, என்பவர், மது போதையில் சிறுநீர் கழிப்பதையும், எச்சில் துப்புவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த முருகேஷ், மரக்கட்டையால் நாகரத்தினம்மா தலையில் அடித்தார். மேலும், அருகில் அவரிடம் பேசி கொண்டிருந்த ரைஸ் மில் உரிமையாளர் காவிரியப்பாவையும் தாக்கினார்.

இதில், காயமடைந்த இருவரும், தேன்

கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு நாகரத்தினம்மா அனுப்பி வைக்கப்பட்டார். காவிரியப்பா புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் முருகேஷை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us