ADDED : நவ 02, 2026 02:20 AM
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., மாயக்கண்ணன் மற்றும் போலீசார், தமிழக எல்லையில் உள்ள கும்மளாபுரம் சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த பொலிரோ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, ஒரு பார்சல் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியிலிருந்து, புகையிலை பொருட்களை கடத்திச் செல்வது தெரிந்தது.இதனால் வாகனத்தை ஓட்டி வந்த, தளி அருகே ஜவளகிரியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ், 34, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 25,820 ரூபாய் மதிப்புள்ள, 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜேசிடம் போலீசார் விசாரித்தபோது, ஜவளகிரியை சேர்ந்த நாகராஜ், 45, என்பவருக்கு வழங்க, ஆனைக்கல் பகுதியை சேர்ந்த ஆனந்த்பாபு, 40, என்பவர், பார்சலை கொடுத்தனுப்பியது தெரிந்தது. இது தொடர்பாக, நாகராஜ் மற்றும் ஆனந்த்பாபு, 40, ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
