தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தனியார் ஊழியரை தாக்கியவர் கைது; 2 மாணவர்களுக்கு வலை

தனியார் ஊழியரை தாக்கியவர் கைது; 2 மாணவர்களுக்கு வலை

தனியார் ஊழியரை தாக்கியவர் கைது; 2 மாணவர்களுக்கு வலை


ADDED : நவ 18, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்,:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உப்பிடமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 29. கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே பொம்மசந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த, 15ம் தேதி இரவு, 8:30 மணிக்கு, மணிகண்டன் தன் நண்பர் நீலமேகம் என்பவருடன், ஓசூர் சிப்காட் ஹவுசிங் காலனி வழியாக நடந்து சென்றார். அவ்வழியாக மாணவர்கள் இருவர், பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றனர். அதனால், பைக்கை மெதுவாக ஓட்டி செல்ல மணிகண்டன் அறிவுறுத்தினார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவர்கள் இருவரும், தன் நண்பருடன் சேர்ந்து, மணிகண்டனை தகாத வார்த்தையால் திட்டி, கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த மணிகண்டன், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது புகார் படி, ஓசூர் சிப்காட் ஹவுசிங் காலனி திருவள்ளுவர் நகரை சேர்ந்த மனோஜ், 20, என்பவரை, சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த, அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும், 16 வயது மாணவன், பிளஸ் 1 படிக்கும், 17 வயது மாணவனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us