/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுமேலாளரை கொல்ல முயற்சி; ஊழியருக்கு போலீசார் வலை
/
பொதுமேலாளரை கொல்ல முயற்சி; ஊழியருக்கு போலீசார் வலை
பொதுமேலாளரை கொல்ல முயற்சி; ஊழியருக்கு போலீசார் வலை
பொதுமேலாளரை கொல்ல முயற்சி; ஊழியருக்கு போலீசார் வலை
ADDED : ஜன 06, 2024 07:14 AM
ஓசூர் : ஓசூர், தில்லை நகரை சேர்ந்தவர் சுரேஷ், 35. மோரனப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பொது மேலாளராக பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் பத்தலப்பள்ளி கே.வி.எஸ்., நகரை சேர்ந்த சென்னபசப்பா, 34, என்பவர் வேலை செய்கிறார். அங்கு பணியாற்றும் மஞ்சுநாத், வெங்கடேசப்பா ஆகியோர், அந்த நிறுவனத்தில் மெஷின் ஆப்ரேட்டர்களாக பணியாற்றிய நிலையில், பிரின்டிங் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
இதையறிந்த சென்னபசப்பா, நேற்று முன்தினம் காலை பொது மேலாளர் அறைக்கு சென்று, இரு தொழிலாளர்கள் மாற்றப்பட்டது குறித்து கேள்வி கேட்டார்.இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சென்னபசப்பா, அரிவாளால் பொதுமேலாளர் சுரே ைஷ தாக்கி கொலை செய்ய முயன்றார். தலையில் படுகாயமடைந்த அவர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிறுவனத்தின் மனிதவள பிரிவு அதிகாரி கார்த்திக் கொடுத்த புகார்படி, சென்னபசப்பா மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து, அவரை ஹட்கோ போலீசார் தேடுகின்றனர்.