/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நகை கடை ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி; ஒருவர் கைது
/
நகை கடை ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி; ஒருவர் கைது
நகை கடை ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி; ஒருவர் கைது
நகை கடை ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி; ஒருவர் கைது
ADDED : மார் 06, 2024 02:35 AM
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளியில், தர்மபுரி சாலையில், போலீஸ் ஸ்டேஷன் அருகில், 40
ஆண்டுகளுக்கு
மேலாக நகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன், 50; நேற்று நகை கடைக்கு
விடுமுறை என்பதாலும் நேற்று முன்தினம் இரவு, செக்யூரிட்டியும்
பணியில் இல்லை.
இதையறிந்த, வீரமலையை சேர்ந்த அம்மாசி, 50,
என்பவரின் மகன் கிரண்குமார், 24, கஞ்சா போதை பழக்கத்தின் மூலம்
பழக்கமானவர்களுடன் சேர்ந்து, நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் நகை
கடையின் ஷட்டரை வெல்டிங் மிஷின் மூலம் கட் செய்து, கிரண்குமார் உள்ளே
நுழைந்துள்ளார்.
இதை, நகை கடை எதிரே தனியார் வங்கியில்,
பாதுகாப்பு பணியில் இருந்த வாட்ச்மேன் பார்த்து, போச்சம்பள்ளி
போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார், நகை கடை கொள்ளையில்
ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற எண்ணினர்.
இதையடுத்து
பாதுகாப்பு பணிக்காக, 50க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து, கொள்ளை
முயற்சியில் ஈடுபட்டவர்களை வெளியே வருமாறு கூறியதையடுத்து, நகை
கடையில் இருந்து வெளியில் வந்த கிரண்குமாரை கைது செய்தனர். மேலும்
அவருடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

