/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அவதானப்பட்டி மாரியம்மன் திருவிழா 1,000 பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
/
அவதானப்பட்டி மாரியம்மன் திருவிழா 1,000 பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
அவதானப்பட்டி மாரியம்மன் திருவிழா 1,000 பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
அவதானப்பட்டி மாரியம்மன் திருவிழா 1,000 பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
ADDED : ஆக 07, 2025 12:59 AM
கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், 261ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம், 17ல் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்து வந்தது.
நேற்று காலை, 10:30 மணிக்கு, அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்துார், பெரியமுத்துார், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் மற்றும் கரகமும்,
அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி மற்றும் பொன்கரகமும் இணைந்து, அவதானப்பட்டி மேம்பாலம் அருகில், தலை கூடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 20 அடி வரை அலகு குத்திக் கொண்டும், காளி மற்றும் அம்மன் வேடம் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும், பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பெண்கள் மாவிளக்கை அம்மனுக்கு படைத்து வேண்டுதல் நிறைவேற்றினர். கோவில் முன்பு ஏராளமான ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.