/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்ணிடம் ரூ.25 லட்சம் 'ஆன்லைன்' வேலை மோசடி
/
பெண்ணிடம் ரூ.25 லட்சம் 'ஆன்லைன்' வேலை மோசடி
ADDED : ஆக 06, 2025 03:21 AM
கிருஷ்ணகிரி:பகுதிநேர வேலை என்ற பெயரில், தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், 25 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஒன்னவாடியைச் சேர்ந்தவர் உஷாராணி, 47; தனியார் நிறுவன ஊழியர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏப்., 23ல் ஒரு விளம்பரம் வந்தது. அதில், 'பார்ட் டைம் கம்ளீட் ஜாப்' என்ற பெயரில் அவர்கள் அனுப்பும், 'லிங்க்'களுக்கு 'லைக்' கொடுத்தால், ஊதியம் கிடைக்கும் என்றிருந்தது.
லைக் கொடுத்த உஷாராணிக்கு, சிறிது பணம் கிடைத்தது. மற்றொரு மெசேஜில், முதலீட்டு தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என, இருந்தது. அதையும் நம்பிய அவர், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில், தன்னிடமிருந்த, 25.08 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதற்கான லாபத்தொகை வரவில்லை.
முதலீட்டு தொகையையும் எடுக்க முடியவில்லை. கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.