/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உணவு பொருளில் கலப்படம் மக்களிடையே விழிப்புணர்வு
/
உணவு பொருளில் கலப்படம் மக்களிடையே விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2025 02:15 AM
பென்னாகரம்: பென்னாகரத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பொருளில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
பென்னாகரம் அடுத்த, பருவதனஅள்ளி தனியார் மெட்ரிக்கு-லேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக, 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், உணவு பாதுகாப்புத்துறை சார்-பாக பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சார்ந்து விளக்கம் அளித்தார். அப்போது, உணவு பாதுகாப்பு, உணவு பொருள் பாக்-கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள், முக்கியமாக பொட்-டலம் இடப்பட்ட உணவு பொருட்களில், உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தேதி, முடிவு தேதி, உணவு பாது-காப்பு உரிமம் எண், எடை, எண்ணிக்கை, உட்காரணிகள் ஊட்டச்-சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் அலர்ஜி தன்மை குறித்து தெளிவாக கூறி, விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு செய்தார்.
பொதுமக்கள், தர்மபுரி கலெக்டர் சதீஸ், பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி முன்னிலையில் கலப்பட பொருட்களை, எவ்வாறு தெரிந்து கொள்வது என செயல்வி-ளக்கம் அளித்தார்.