/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வன உயிரின வார விழாவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
/
வன உயிரின வார விழாவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வன உயிரின வார விழாவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வன உயிரின வார விழாவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : அக் 07, 2024 03:18 AM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்ட வனத்துறை சார்பில், வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், வன உயிரின வார விழா கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. வரும், 13 வரை கண்காட்சியை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.
இதன் ஒரு பகுதியாக, வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்ற வன உயிரின வார விழா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து துவங்கிய
பேரணியை, வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா ஆகியோர் துவக்கி வைத்து, சைக்கிளில் பேரணியாக சென்றனர். பேரணி ராமநாயக்கன் ஏரியில் நிறைவு பெற்றது. அங்கு
துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே, வனச்சரகர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.

