தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/.திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

.திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

.திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு


UPDATED : அக் 24, 2026 04:40 AM

ADDED : அக் 24, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 04:40 AM ADDED : அக் 24, 2026 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட அலசநத்தம் வெங்-கடேஷ் நகரில் உள்ள, சப்தகிரி மெட்ரிக் மேல்நி-லைப்பள்ளியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி செய்-யக்கூடிய கழிவு மற்றும் வீட்டு அபாய கழிவுகள் என, 4 வகைகளாக பிரித்து வழங்குவதன் முக்கி-யத்துவம் குறித்து, மாநகராட்சி அலுவலர்கள் விளக்கி கூறினர். மேலும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், வீடுகள் மற்றும் சுற்றுப்பு-றங்களில், மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்கள் மற்றும் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்-டிகள் உள்ளிட்டவற்றில் நீர் தேங்காமல் அகற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சுயமருத்துவம் மேற்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி, சிகிச்சை பெற வேண்டும் என, மாணவ, மாணவியருக்கு அறி-வுரை வழங்கப்பட்டது.மாணவர்கள் குப்பையை தரம் பிரிப்பது குறித்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கை பற்றியும், சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு விழிப்பு-ணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாநகராட்சி அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us