UPDATED : அக் 16, 2026 04:13 AM
ADDED : அக் 16, 2026 03:29 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: ரோட்டரி கிளப் மற்றும் நாளந்தா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் துவங்கிய இப்பேரணியை, டி.எஸ்.பி., ராமசந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாளந்தா பள்ளி நிறுவனங்களின் மேனேஜிங் டைரக்டர் புவியரசன், ரோட்டரி கிளப் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சிவகுருநாதன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அப்துல் கலாமின் முகமூடி அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
