தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஆக 09, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: இந்திய மருந்தாக்கியல் பட்டதாரிகள் சங்க தமிழக கிளை சார்பில், 'பார்மா கனெக்ட் - 2026' என்ற தலைப்பில், ஓசூரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தமிழக கிளை தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பார்மெக்சில் இயக்-குனர் ஜெனரல் ராஜாபானு பங்கேற்று, உலகளாவிய தரக்கட்டுப்-பாட்டு விதிமுறைகளை இந்திய மருந்து நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

அத்துடன், மருந்து ஏற்றுமதியை அதிகரிக்க சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பங்களிக்க முடியும் என்றும், அதற்கு, பார்மெக்சில் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஓய்வு பெற்ற இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பங்கரூராஜன், திருத்தப்பட்ட ஜி.எம்.பி., விதிமுறைகளுக்கு இணங்குதல் என்ற தலைப்பிலும், டாக்டர் நரேந்திரன், ஒழுங்கு-முறை ஆவண சமர்ப்பிப்புகள் குறித்தும் பேசினர். டாக்டர்கள் அதியமான், நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us