/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அயோத்தி ராமர் கோவில் அட்சதை கும்பம் பூஜித்து பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பு

ADDED : ஜன 01, 2024 11:20 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், அயோத்தி ராமர் கோவில் அட்சதை கும்பம் பூஜை செய்து பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் பூஜை செய்த அட்சதை கும்பம் மற்றும் ராமரின் திருவுருவ படம் அடங்கிய தொகுப்பை, சங்க பரிவார் அமைப்பின் மூலம், நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த, புண்ணிய பூஜை பொருட்கள் நாட்டின் அனைத்து கிராமத்து வீடுகளை சென்றடையும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து, அனைத்து பஞ்., பக்த பொறுப்பாளர்கள் குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக ஆன்மிக விழா பற்றிய விழிப்புணர்வு
ஊர்வலமும் நடந்தன.
நிகழ்ச்சியை, சங்க பரிவாரின் மாவட்ட பொறுப்பாளர்கள்
முத்துராஜ், கோவிந்தராஜ், தெய்வம், கணேஷ், ஒன்றிய பொறுப்பாளர் ராஜீவ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில பொறுப்பாளர் ஸ்ரீவிஷ்ணு, பஜ்ரங்தள் அமைப்பின் கிரண், பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜூ, பாரதீய கிசான் சங்க மாவட்ட பொறுப்பாளர் பாரூர் சரவணமணியகார் ஆகியோர்
பங்கேற்றனர்.