ADDED : டிச 23, 2024 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கெலமங்கலம் சித்தலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் அருகே, ஐயப்ப பக்தர்கள் சார்பில், 16ம் ஆண்டு பல்லக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு ஐயப்பன், சித்திலிங்கேஸ்வரர், பார்வதி தேவி ஆகிய சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளுடன், கேரள மாநில செண்டை மேளம் முழங்க, பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஐயப்ப சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஐயப்ப பக்தர்களின் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை, குருசாமி நஞ்சுண்டப்பா மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

