/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்கள் விடுதி குளியலறையில் வீடியோ எடுக்க முயன்றதால் பகீர்
/
பெண்கள் விடுதி குளியலறையில் வீடியோ எடுக்க முயன்றதால் பகீர்
பெண்கள் விடுதி குளியலறையில் வீடியோ எடுக்க முயன்றதால் பகீர்
பெண்கள் விடுதி குளியலறையில் வீடியோ எடுக்க முயன்றதால் பகீர்
ADDED : ஆக 22, 2025 11:17 PM
ஓசூர்:பெண்கள் விடுதி குளியலறையில் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அரசனட்டி பகுதி விடுதியில், வெளி மாவட்டத்தை சேர்ந்த, 21 வயது பெண் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். விடுதியில் இரு தளங்களில், 18 அறைகளில், 40 பெண்கள் தங்கியுள்ளனர்.
தரைத்தளத்தில் உள்ள குளியலறையில் கடந்த, 20ம் தேதி அதிகாலை, 21 வயது பெண் குளிக்க சென்றார்.
அப்போது குளியலறை ஜன்னல் வழியாக ஒயர் ஒன்று கேமராவுடன் தொங்கியதை பார்த்து பிடித்து இழுத்தார். அப்போது வெளிப்புறமாக நின்று ஒருவர் கேமராவில் வீடியோ எடுப்பது தெரிய வந்தது.
ஒயரை வலுவாக இழுத்ததில் கேமரா பெண்ணிடம் சிக்கியது. ஆசாமி ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து, விடுதி நிர் வாகத்திடம் இளம்பெண் கூறினார். நிர்வாகம் சார்பில், சிப்காட் போலீசில் புகாரளிக்கப்பட்டது.
போலீசார் அப்பகுதி 'சிசிடிவி' கேமராக்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே சமயம் இளம்பெண்ணிடம் சிக்கிய கேமராவில் எதுவும் பதிவாகவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இச்சம்பவம், விடுதியில் தங்கியுள்ள மற்ற பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.