/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விஷ வண்டு கடித்து வங்கி ஊழியர் பலி
/
விஷ வண்டு கடித்து வங்கி ஊழியர் பலி
ADDED : டிச 04, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், தொட்டபைரஹள்ளியை சேர்ந்தவர் அரவிந்தகுமார், 42. திருப்பத்துாரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பயிற்சி இயக்குனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை அவர், பைக்கில் ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகில் சென்றுள்ளார்.
அப்போது இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது விஷ வண்டு ஒன்று அவரை கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்கு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

