/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மயானத்தில் அடிப்படை வசதி ஓசூர் மேயர் உத்தரவு
/
மயானத்தில் அடிப்படை வசதி ஓசூர் மேயர் உத்தரவு
ADDED : நவ 13, 2024 07:45 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அலசநத்தம் பிரிவு சாலையில், தேசிய நெடுஞ்சாலையோர மயானத்தில், மாநகர மேயர் சத்யா, கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, எரிவாயு தகன மேடை அமைத்துள்ள பகுதியில் புதிதாக கழிப்பிடம், அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றுதல், மயான பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைத்தல், மயான வெளிப்புறத்தில் பேவர் பிளாக், சுற்றுச்சுவர், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த, மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து, 12வது வார்டுக்கு உட்பட்ட பாப்பண்ணா தோட்டம், நேதாஜி பூங்கா, பிருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளில், மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப்போது, கழிவு நீர் கால்வாய், தார்ச்சாலை, குடிநீர் பிச்னை இருப்பதாக, பொதுமக்கள் புகார் செய்தனர். குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக, மேயர் சத்யா உறுதியளித்தார். கவுன்சிலர்கள் ஆஞ்சப்பா, பெருமாயி அருள் உட்பட பலர் உடனிருந்தனர்.

