/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சியில் ரூ.116 கோடி வரி நிலுவை வேலைப்பளு என பில் கலெக்டர்கள் ஆதங்கம்
/
ஓசூர் மாநகராட்சியில் ரூ.116 கோடி வரி நிலுவை வேலைப்பளு என பில் கலெக்டர்கள் ஆதங்கம்
ஓசூர் மாநகராட்சியில் ரூ.116 கோடி வரி நிலுவை வேலைப்பளு என பில் கலெக்டர்கள் ஆதங்கம்
ஓசூர் மாநகராட்சியில் ரூ.116 கோடி வரி நிலுவை வேலைப்பளு என பில் கலெக்டர்கள் ஆதங்கம்
ADDED : டிச 19, 2024 07:20 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு, 116 கோடி ரூபாய் வரி வருவாய் வசூலா-காமல் உள்ள நிலையில், அதிக வேலைப்பளுவால், மன உளைச்சல் ஏற்படுவதாக, பில் கலெக்டர்கள் தெரி-வித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் ஸ்ரீகாந்த், உதவி கமிஷனர் டிட்டோ முன்னிலை வகித்தனர். தலைவர் சென்னீரப்பா தலைமை வகித்து பேசியதாவது:
ஓசூர் மாநகராட்சிக்கு வரியினங்கள் மூலம், இந்தாண்டு நிலுவை தொகையுடன் சேர்த்து, 150 கோடி ரூபாய் வரவேண்டிய வரு-வாயில், 34 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி, 116 கோடி ரூபாய் வரவேண்டி உள்ளது. கடந்த, 2017ம் ஆண்டு முதல், கணக்கிட்டு, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் குப்பை வரியை நிலுவை தொகையுடன் செலுத்தும் உத்தரவால், மக்கள் பாதிக்கப்பட்டுள்-ளனர். இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். மாநகராட்சியில், 97,000 கட்டடங்களுக்கு வரி விதித்தும், 15,000 கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படாமலும் உள்ளது. வாகன ஷெட், மாடி படிக்கட்-டுகள் அளவீடு செய்து வரி விதித்துள்ளதை கைவிட வேண்டும். குறைவாக உள்ள பில் கலெக்டர்கள் எண்ணிக்கையை, கமிஷனர் உயர்த்த வேண்டும். மேலும், 3 மடங்கு வரி உயர்வால், மக்கள் மத்தியில் கவுன்சிலர்கள் செல்ல முடியவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.வரி வசூல் செய்ய செல்லும் இடங்களில் பில்கலெக்டர்கள், மக்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்-பட்டது. அதற்கு பில்கலெக்டர்கள், 'கூடுதல் பணிகளை மேற்கொள்வதால், அதிக வேலைப்பளுவால், மன உளைச்சல் ஏற்படுகிறது. வரி விதிக்கும் ஏரியா வெவ்வேறு பகுதியில், 5 கி.மீ., தொலைவில் உள்ளதால், கடினமாக உள்ளது' என்றனர். முன்னதாக பேசிய, தி.மு.க., கவுன்சிலர் நாகராஜ், ''கவுன்சிலர்கள் கூறியும், பில் கலெக்டர்கள் பணிகளை செய்வதில்லை. வரி விதிப்பு மேற்கொள்ள காலதாமதம் செய்கின்றனர்,'' எனக்கூறி, வெளிநடப்பு செய்தார்.