/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓடை அமைக்க தார்ச்சாலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கறுப்பு கொடி

ADDED : ஜன 28, 2025 06:41 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள ஏரியில், அடிக்கடி மழைநீர் நிரம்பி, சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் பணியாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிப்காட் ஏரியிலிருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் பகுதியை வருவாய் துறையினர் கண்டறிந்து, குறிப்பிட்ட துாரம் வரை ஆக்கிரமிப்பு கால்வாயை துார்வாரி வருகின்றனர். இந்நிலையில் பாளேதோட்டம் அடுத்த, மொளகனுார், செவத்தான்கொட்டாய் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை, ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, அந்த தார்ச்சாலையை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அப்பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த அச்சாலையை அகற்றி விட்டு ஓடை அமைத்தால், தங்கள் பகுதியிலுள்ள வீடுகளுக்கு மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாது. அதனால் சாலையில் ஓடை அமைக்க மொளகனுார் கிராம மக்கள், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்பு கொடி கட்டி நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் கட்டியிருந்த கறுப்பு கொடியை அகற்றினர்.