/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி எருதாட்டம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
அனுமதியின்றி எருதாட்டம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : பிப் 08, 2024 04:45 PM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளியில் நேற்று அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது.
அதில், 120 மீ., துாரத்தை கடக்கும் முதல், 50 காளைகளுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. ஆனால் மாடுகளுக்கு கால்நடை துறை பரிசோதனை, காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ், மருத்துவக்குழு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடந்த விழாவை, அதிகாரிகள், போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் மாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி காயம் அடைந்தன. மேலும் மாடுகள் முட்டி, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இனியாவது அனுமதியின்றி நடக்கும் எருதுவிடும் விழாக்களை அதிகாரிகள் முன்கூட்டியே தடுத்து நிறுத்த, மக்கள் வலியுறுத்தினர்.

