/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
/
குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : அக் 24, 2024 01:07 AM
குண்டும், குழியுமான தார்ச்சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
போச்சம்பள்ளி, அக். 24-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெருகோபனபள்ளியில் இருந்து, சந்துார் செல்லும் சாலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் அமைத்த இந்த தார்ச்சாலை தற்போது ஆங்காங்கே குண்டும், குழியுமாக மிகவும் சேதமடைந்தள்ளது.
குருகப்பட்டி, கிட்டனுார் மற்றும் பெருகோபனபள்ளியிலுள்ள மக்கள், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், அதேபோல் இப்பகுதியிலுள்ள பள்ளி மாணவ, மாணவியர் பள்ளி செல்லவும், சுற்று வட்டார பகுதி மக்கள் மருத்துவமனை செல்லவும் இச்சாலையை பயன்படுத்துவதால், மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான தார்ச்சாலையை அகற்றி, புதிய தார்ச்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.