/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொடர் பொங்கல் விடுமுறை முடிந்து பணிகளுக்கு திரும்பிய மக்களால் பஸ் ஸ்டாண்டுகளில் நெரிசல்
/
தொடர் பொங்கல் விடுமுறை முடிந்து பணிகளுக்கு திரும்பிய மக்களால் பஸ் ஸ்டாண்டுகளில் நெரிசல்
தொடர் பொங்கல் விடுமுறை முடிந்து பணிகளுக்கு திரும்பிய மக்களால் பஸ் ஸ்டாண்டுகளில் நெரிசல்
தொடர் பொங்கல் விடுமுறை முடிந்து பணிகளுக்கு திரும்பிய மக்களால் பஸ் ஸ்டாண்டுகளில் நெரிசல்
ADDED : ஜன 20, 2025 06:51 AM
கிருஷ்ணகிரி: பொங்கலையொட்டி கடந்த, 11 முதல் நேற்று வரை, 9 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூரில் பணியாற்றியவர்களும், சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதியில் பணியாற்றி வந்தவர்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கலை கொண்டாடி விட்டு, நேற்று அவரவர்கள் பணியாற்றும் பகுதிக்கு திரும்பினர்.
கூடுதல் பஸ் இயக்கம்
மக்கள் நேற்று, பெங்களூருவுக்கும், சென்னை, சேலத்திற்கும் கிருஷ்ணகிரி வழியாக பஸ் மற்றும் கார்களில் திரும்பினர். இதனால் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர், தர்மபுரிக்கு கூடுதலாக, 10 அரசு பஸ்களும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து, 80 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதனால் நேற்று காலை முதல், கிருஷ்ணகிரியில் இருந்து அந்தந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர். ஆனாலும், திருவண்ணாமலை சென்ற பஸ்களை தவிர, மற்ற அனைத்து பஸ்களிலும் பொதுமக்கள் நின்று கொண்டு பயணம் செய்யும் அளவிற்கு கூட்டம் இருந்தது. பயணிகள் தங்கள் உடமைகள், குழந்தைகள் மற்றும் நகைகளை பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் ஸ்பீக்கரில் ஒலி பரப்பிக் கொண்டிருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பில்லை
கடந்த, 2 நாட்களாக பணியாற்றும் இடங்களுக்கு பலர் திரும்பி கொண்டிருப்பதால், நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நிற்காமல் சென்றபடி இருந்தன. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற வாகனங்கள் மட்டும், 10 நிமிட தாமதத்தில் நின்று சென்றன. இதனால் பெரிய அளவில் நேற்று போக்குவரத்து பாதிக்கவில்லை.
மக்கள் நெரிசல்
பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தாங்கள் பணியாற்றும் மற்றும் படிக்கும் ஊர்களுக்கு என, நேற்று காலை முதலே, தொழிலாளர்கள், பள்ளி,- கல்லுாரி மாணவர்கள் திரும்பினர். அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும், தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இதில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர் சென்றவர்களை வழியனுப்ப வந்த உறவினர்களின் வாகனங்களால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரயில்வே ஸ்டேஷனில்
நேற்று காலை, 9:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்து, பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மாணவ, மாணவியரை வழியனுப்ப, பெற்றோரும் உடன் வந்ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல நேற்று காலை, 8:30 மணி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.