/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி கன்று விடும் விழா: ஆர்வம் காட்டாத இளைஞர்கள்
/
அனுமதியின்றி கன்று விடும் விழா: ஆர்வம் காட்டாத இளைஞர்கள்
அனுமதியின்றி கன்று விடும் விழா: ஆர்வம் காட்டாத இளைஞர்கள்
அனுமதியின்றி கன்று விடும் விழா: ஆர்வம் காட்டாத இளைஞர்கள்
ADDED : நவ 14, 2025 01:27 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, காட்டாகரம் பஞ்., பட்டகப்பட்டி கிராமத்தில், அனுமதியின்றி நேற்று கன்று விடும் திருவிழா நடந்தது.
இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து, 150க்கும் மேற்பட்ட கன்றுகள் கொண்டு வரப்பட்டது. இதில் குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுக்கு முதல் பரிசாக, 51,000 ரூபாய், 2-ம் பரிசாக, 41,000 ரூபாய், 3-ம் பரிசாக, 31,000 ரூபாய் என, 40க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு குறைந்த அளவு கன்றுகளே கொண்டு வரப்பட்டன. அதேபோல் விழாவை காண ஆர்வம் காட்டாததால், குறைந்தளவே இளைஞர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர். மேலும், கால்நடை மருத்துவக்
குழு, ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படாமல் விழா நடத்தப்பட்டது.
இதுகுறித்து, போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமியிடம் கேட்டபோது, ''கன்று விடும் திருவிழாவிற்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. அந்த இடத்தில் வேறு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என, போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அனுமதி பெறாமல் கன்று விடும் திருவிழா நடத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்,'' என்றார்.
தை பொங்கல் திருநாள் முடிந்து ஒரு மாதம் தொடர்ந்து, எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த, 2 ஆண்டுகளாக, கட்சிகளின் விளம்பரத்திற்காகவும், ஒரு சிலர் தங்களுக்கு தேவையான வருமானத்தை பெறவும், தொடர்ந்து ஆண்டு முழுவதும் அரசு அனுமதியின்றி, கன்று விடும் விழாவை நடத்தி
வருவது குறிப்பிடத்தக்கது.

