ADDED : செப் 17, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி, பாளேகுளி கிராமத்தில், அ.தி.மு.க., சார்பில், நேற்று கன்று விடும் திருவிழா நடந்தது. இதை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை துவக்கி வைத்தனர்.
இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து, 300 கன்றுகளை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் குறிப்பிட்ட துாரத்தை, குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுக்கு, முதல் பரிசாக 50,000 ரூபாய் மற்றும் 2ம் பரிசாக 40,000 ரூபாய், 3ம் பரிசாக, 30,000 ரூபாய் என, 150க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. விழாவை காண, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். நாகரசம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.