/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் வளர்ச்சி திட்ட ஆலோசனைக்கு அழைப்பு
/
ஓசூர் வளர்ச்சி திட்ட ஆலோசனைக்கு அழைப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வளர்ச்சி திட்டம் (முழுமை திட்டம்) தொடர்பாக ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டு, சென்னை நகர ஊரமைப்பு இயக்குனருக்கு சமர்பிக்-கப்பட்டது.
நகர ஊரமைப்பு இயக்குனர் கடந்த, 9ல் அனுப்பிய கடிதத்தில், திருத்திய ஓசூர் வளர்ச்சி திட்ட அறிக்கை மற்றும் அட்டவணை பெறப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கை மற்றும் அட்டவணை மீது, மேலும் கூடுதலாக, 15 நாட்கள் (30 ம் தேதி வரை) பொது-மக்கள் தங்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் தங்களின் ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை, கிருஷ்ணகிரி துணை இயக்குனர், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.