ADDED : ஜூலை 28, 2026 05:56 AM
ஓசூர்; ஓசூர் மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும், அவர்-களது குடும்பத்திற்கும் அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில், நேற்று காலை சிறப்பு
முகாம் நடந்தது.
ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்-தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா ஆகியோர், குத்துவிளக்கேற்றி, முகாமை துவக்கி வைத்தனர். ஆதார் பதிவு, பிறப்பு சான்றிதழ், வரு-மான சான்றிதழ், சாதி, சான்றிதழ், மகளிர் உரி-மைத்தொகை, வாரிசு சான்றிதழ், புதுமைப்பெண், முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு
விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாநகர நல அலுவலர் அஜிதா, நிலைக்குழு தலைவர்கள் பார்வதி நாகராஜ், இந்திராணி, மண்டல
தலைவர் ரவி உட்பட பலர்
பங்கேற்றனர்.
