ADDED : ஜூலை 27, 2026 01:06 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தேர்வு முறைகேடுகள், டில்லியில் நடந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றை கண்-டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், ஓசூரில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., ஒருங்கிணைப்பாளர் முரளி-தரன் தலைமை வகித்தார்.
துணை ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மைஜா அக்பர், பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். ஓசூர் தாலுகா அலுவலகம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம், பழைய தொலைபேசி அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ஏரித்தெரு வழி-யாக சென்று, காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கீர்த்திகணேஷ், மகளிரணி மாவட்ட தலைவர் சரோஜம்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
