நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்,டி.என்.பாளையத்தில் தனியார் கல்லுாரிக்கு செல்லும் சாலையில், கஞ்சா விற்பதாக பங்களாப்புதுார் தனிப்பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்றபோது, சந்தேகத்துக்கு இடமாக திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம், ௧௩௦ கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் கடம்பூர், பவளக்குட்டையை சேர்ந்த ரவி மகன் வேணுகோபால், 27, என தெரிந்தது. அவரை கைது செய்தனர்.