/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் விதிமுறையை மீறிய காங்., வேட்பாளர் மீது வழக்கு
/
தேர்தல் விதிமுறையை மீறிய காங்., வேட்பாளர் மீது வழக்கு
தேர்தல் விதிமுறையை மீறிய காங்., வேட்பாளர் மீது வழக்கு
தேர்தல் விதிமுறையை மீறிய காங்., வேட்பாளர் மீது வழக்கு
ADDED : மார் 29, 2024 12:50 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு ஓட்டல் அருகே லேக் அவென்யூ தெருவில், உதவி
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெறாமல், காங்., கட்சி
சார்பில், தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
இது
தொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜய சாமுண்டீஸ்வரி, 55,
ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, காங்., வேட்பாளர்
கோபிநாத் உட்பட, 400 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஓசூர்,
மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில்
தேர்த்திருவிழாவையொட்டி, தேர்ப்பேட்டை நுழைவு வாயில் பகுதியில்,
தேர்தல் விதிமுறைகளை மீறி, உரிய அனுமதி பெறாமல் பேனர் கட்டியதாக,
முத்துராயன் ஜிபியை சேர்ந்த கங்காதரன், 41, மீது, போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர்.
ஓசூர், பழைய மத்திகிரி பகுதியில்
தண்ணீர் தொட்டி அருகே உள்ள ஒரு சுவற்றில், தேர்தல் விதிமுறைகளை மீறி,
அனுமதி பெறாமல் இந்து முன்னணி கட்சி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதனால் வி.ஏ.ஓ., கவுஸ் கொடுத்த புகார்படி, அச்செட்டிப்பள்ளியை
சேர்ந்த மஞ்சுநாத், 29, மீது, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர்.
சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த நாராயணன், 48,
என்பவரது வீட்டு சுவற்றில், அ.தி.மு.க., கட்சி போஸ்டர்
ஒட்டப்பட்டிருந்தது. சூளகிரி எஸ்.எஸ்.ஐ., சையத் பாஷா கொடுத்த
புகார்படி, நாராயணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.

