UPDATED : அக் 20, 2026 04:29 AM
ADDED : அக் 20, 2026 02:34 AM

அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் ராஜ்குமார் மற்றும் போலீசார், சீத்தாராம் மேடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில், உரிய அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.இது தொடர்பாக, போக்குவரத்து தலைமை காவலர் ராஜ்குமார் புகார் படி, பேனர் வைத்ததாக, ஓசூர் சீத்தாராம் மேடு பகுதியை சேர்ந்த மகேந்திரன், 25, சமத்துவபுரத்தை சேர்ந்த பிரசாந்த், 23, ஆகிய இருவர் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
