/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு
ADDED : டிச 09, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த சென்னசந்திரத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.
இது குறித்து வழக்குப்பதிந்த குருபரப்பள்ளி போலீசார் எருது விடும் விழாவை நடத்திய அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 30, சவுந்தர்ராஜன், 32 உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல, கந்திகுப்பம் அடுத்த நாகனப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய ராஜா, 35, பழனிசாமி, 40, உள்பட, 6 பேர் மீது, கந்தி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

