/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடன் தகராறில் பெண்ணை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
/
கடன் தகராறில் பெண்ணை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 23, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, குப்பைமேட்டு தெருவை சேர்ந்தவர் ரேவதி, 38. இவர், கொத்தப்பேட்டா காலனியை சேர்ந்த சுகந்தி, 42, என்பவரிடம் ஓராண்டிற்கு முன், 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
ஆனால், பணத்தை திரும்ப தரவில்லை. நேற்று முன்தினம் ரேவதியின் வீட்டிற்கு சென்ற சுகந்தி, கடனை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரேவதியை, சுகந்தி தரப்பினர் மிரட்டி தாக்கினர். இதுகுறித்து ரேவதி புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சுகந்தி, சிவகாமி, 60, அருண், 24, ஆர்த்தி, 27 ஆகிய, 4 பேர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.