/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருதரப்பினர் தகராறு 5 பேர் மீது வழக்கு
/
இருதரப்பினர் தகராறு 5 பேர் மீது வழக்கு
ADDED : அக் 29, 2025 01:11 AM
கெலமங்கலம், கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது நவாஸ், 40. இவருக்கும், அவரது உறவினர்களுக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்பகை உள்ளது.
இதனால் கடந்த, 26ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, சுல்தான்பேட்டையில் உள்ள பேக்கரி அருகே வைத்து, முகமது நவாசின் தம்பியான ஆட்டோ டிரைவர் முகமது பைசல் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய இருவரை, ஒரு தரப்பினர் இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த இருவரும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முகமது நவாஸ் புகார் படி, சுல்தான்பேட்டையை சேர்ந்த முகமது கலித், 26, அஸ்கர், 40, பானு, 36, ஆஷூ, 30, ஆகிய, 4 பேர் மீது, கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
அதேபோல், முகமது கலித் புகார் படி, முகமது பைசல் மீது வழக்குப்பதியப்பட்டது.

