/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை கத்தியால் குத்திய மாஜி ராணுவ வீரர் மீது வழக்கு
/
மனைவியை கத்தியால் குத்திய மாஜி ராணுவ வீரர் மீது வழக்கு
மனைவியை கத்தியால் குத்திய மாஜி ராணுவ வீரர் மீது வழக்கு
மனைவியை கத்தியால் குத்திய மாஜி ராணுவ வீரர் மீது வழக்கு
ADDED : ஜன 01, 2025 01:24 AM
கரூர், ஜன. 1-
க.பரமத்தி அருகே, மனைவியை கத்தியால் குத்திய, முன்னாள் ராணுவ வீரர் உள்பட, ஐந்து பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், ராசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 54; முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சுமதி, 45; இவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 15 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து, கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே குப்பத்தில் உள்ள, தோழி பாக்கியவதி, 43; என்பவரது வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த, 28ல் நந்தகுமார், அவரது சகோதரி சரஸ்வதி, மகள் பரமேஸ்வரி, மகன்கள் பாபு, சரவணன் உள்ளிட்ட பலர் சென்று, சுமதியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், சுமதி வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நந்தகுமார் கத்தியால், மனைவி சுமதியின் தலையில் குத்தியுள்ளார். தடுக்க சென்ற, தோழி பாக்கியவதி கையிலும் கத்தி குத்து விழுந்தது. இதனால் இருவரும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து, சுமதி கொடுத்த புகார்படி கணவன் நந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

