/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர், பர்கூரில் சுகாதார மையம் காணொலியில் முதல்வர் திறப்பு
/
ஓசூர், பர்கூரில் சுகாதார மையம் காணொலியில் முதல்வர் திறப்பு
ஓசூர், பர்கூரில் சுகாதார மையம் காணொலியில் முதல்வர் திறப்பு
ஓசூர், பர்கூரில் சுகாதார மையம் காணொலியில் முதல்வர் திறப்பு
ADDED : ஜூலை 04, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூரில் நகர்ப்புற நல்வாழ்வு மையம், ஆரம்ப சுகாதார மையத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், 34 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும், 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை காணொலியில் திறந்து வைத்தார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஆம்பள்ளியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம், ஓசூர், தளி சாலையிலுள்ள எஸ்.பி.எம்., காலனியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஆம்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினர்.
அதேபோல் ஓசூரில், 50,000 மக்கள் பயன்பெறும் வகையில், நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஓசூர், சீதாராம் நகர், மத்திகிரி, ஆவலப்பள்ளி, மூக்கண்டப்பள்ளி மற்றும் அப்பாவு நகரில், நகர்ப்புற நல்வாழ்வு மையம் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று புதிதாக திறந்து வைகப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்.
ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாநகராட்சி கமிஷனர் ஷபீர் ஆலம், சுகாதார நல அலுவலர் அஜிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.