/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
/
கிருஷ்ணகிரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 19, 2025 03:21 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ள அரசு விழாவை சிறப்பாக நடத்த, அனைத்து துறை அலுவலர்களும், ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு முதல்வர் கிருஷ்ணகிரி வருகை குறித்து, முன்னேற்பாடு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செப்., 2வது வாரத்தில் வருகை புரிந்து, திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். மேலும், ஓசூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். பல்வேறு துறைகள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்து, பயனாளிகளை விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கு பஸ் வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும். அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கவனம் செலுத்த வேண்டும். பணிகளை எவ்வித தொய்வுமின்றி சிறப்பாக பணிபுரிந்து, அரசு விழா நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

