/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண்டல அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்கம்
/
மண்டல அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்கம்
மண்டல அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்கம்
மண்டல அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்கம்
ADDED : செப் 05, 2025 01:24 AM
கிருஷ்ணகிரி, முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள், 9வது நாளாக நேற்று நடந்தது. போட்டியின் துவக்க விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.
பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தலைவர் ஏகாம்பவாணன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். தி.மு.க., நகர செயலாளர் அஸ்லம் உள்பட பலர் பங்கேற்றனர். திருவண்ணாமலை, மண்டல அளவிலான ஜூடோ, டென்னிஸ், குத்துச்சண்டை போட்டிகள், 6 வரை, 3 நாட்கள் நடக்கிறது. போட்டியில், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்றனர். பள்ளிகளுக்கான பிரிவில், ஜூடோ போட்டியில், 75 மாணவியர், கல்லுாரி பிரிவில், 105 பேர், பள்ளிகளுக்கான குத்துச்சண்டை போட்டியில், 100, கல்லுாரி பிரிவில், 40, பள்ளிகளுக்கான டென்னிஸ் போட்டியில், 45, மற்றும் கல்லுாரி பிரிவில், 30 மாணவியர் பங்கேற்றனர். பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில், பெண்கள் பிரிவில், கையுந்துபந்து போட்டியில், 266 மாணவியர், மேசைப்பந்து போட்டியில், 78 மாணவியர், ஹாக்கி போட்டியில், 180 மாணவியர் என மொத்தம், 919 பேர் பங்கேற்றனர்.